பேஷ் பேஷ்…நாளை வெளியாகும் 4 தரமான தமிழ் திரைப்படங்கள்.!

ஒவ்வொரு வாரமும் வெள்ளி திரையில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரம் வெள்ளியன்று (நாளை) டிசம்பர் 15ம் தேதி மொத்தம் நான்கு திரைப்படங்கள் களமிறங்குகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்கும் உறியடி விஜய் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ திரைப்படம் மற்றும் இயக்குனர் பாரி கே விஜய் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள ‘ஆலம்பனா’ திரைப்படங்கள் உடன் மேலும் இரண்டு படங்கள் வெளியாகிறது.
அவை வேற யாருடைய திரைப்பமும் இல்ல, நிஜ வாழ்க்கையில் கணவன் மனைவியும் திரைஉலகில் நடிகர் நடிகையுமான அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் தனி தனியே நடித்துள்ள ‘சபாநாயகன்’ மற்றும் ‘கண்ணகி’ ஆகிய இரண்டு படங்களும் நாளை (டிசம்பர் 15ம் தேதி) ஒன்றாக மோதுகிறது.
ஃபைட் கிளப்
உறியடி படத்தை இயக்கி நடித்ததன் மூலம் பிரபலமான விஜய் குமார் தற்போது லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான அப்பாஸ் ஏ. ரஹ்மத் சசி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “ஃபைட் கிளப்”. இந்த திரைப்படத்தில் மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், அவினாஷ் ரகுதேவன், சரவண வேல் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ஜி ‘g squad ‘ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்குகிறார். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
சபாநாயகன்
சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள படம் ‘சபாநாயகன்’. அரவிந்த் ஜெயபாலன், ஐயப்பன் ஞானவேல், கேப்டன் மேகவாணன் இசைவாணன் ஆகியோர் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
கண்ணகி
ஷாலின் ஜோயா இயக்கிய ‘கண்ணகி’ படத்தில் கீர்த்தி பாண்டியன் கர்ப்பிணிப் பெண்ணாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஆதேஷ்வர், அம்மு அபிராமி மற்றும் வித்யா பிரதீப் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். E5 என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்கைமூன் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்க, ஜே அனூப் சீலின், ஷான் ரஹ்மான் ஆகியோர் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
ஒரே நாளில் மோதிக் கொள்ளும் புதுமண தம்பதிகள் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்.!
ஆலம்பனா
வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி படமான “ஆலம்பனா” படத்தில் ரோபோ ஷங்கர், காளி வெங்கட், பார்வதி நாயர் மற்றும் முனிஷ்காந்த் ஆகியோர் ஜெனி வேடத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் பரி கே விஜய் இயக்கியுள்ள இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் கௌஸ்துப் என்டர்டெயின்மென்ட்தயாரிக்க, ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025