4 முனை போட்டி! இயக்குனர் சங்க பதவிக்கு போட்டியிடும் நான்கு பிரபலங்கள்!
இயக்குனர் சங்க தலைவராக இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் பாரதிராஜா தேர்தெடுக்கப்பட்டதற்கு சங்கத்துக்குள் எதிர்ப்புகள் எழுந்தன. மேலும் பல இயக்குனர் பாரதிராஜாவை விமர்சனம் செய்துள்ளனர். இதனையடுத்து பாரதிராஜா தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் சங்க தலைவருக்கான போட்டி அதிகரித்துள்ளது. இயக்குனர்கள் பி.வாசு, அமீர், கே.எஸ்.ரவிக்குமார். எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்துள்ளனர். தலைவர் பதவிக்கு 4 முனை போட்டி நிலவுவதால், திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.