PONGAL 2024 movies [File Image]
பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை என்றாலே வருடம்தோறும் பல நல்ல படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், இந்த ஆண்டு (2023) தீபாவளி பாண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம், ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்எல், ரெய்டு உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை தொடர்ந்து அடுத்ததாக அடுத்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் 4பெரிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது. அது என்னென்ன திரைப்படம் என்பதனை பற்றி விவரமாக பார்க்கலாம்.
1.தங்கலான்
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் தான் ‘தங்கலான்’ . இந்த திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் விக்ரமிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தான் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
2.அயலான்
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் “அயலான்”. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிந்துவிட்டது. படத்தின் சிஜி வேலைகள் முடியாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. இறுதியாக படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படத்தின் டீசர் வெளியீட்டு அறிவித்துவிட்டது.
3.லால்சலாம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஸ்னு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ராஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள காரணத்தால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த திரைப்படமும் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தான் வெளியாகவுள்ளது.
4.அரண்மனை
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 3 பாகங்களாக வெளியாகி ஹிட் ஆன திரைப்படம் அரண்மனை. கடைசியாக வெளியான அரண்மனை 3 திரைப்படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்றாலும் கூட இயக்குனர் சுந்தர் சி அரண்மனை 4 படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் தமன்னா, ராசிக்கன்னா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்திற்க்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழன் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…