Categories: சினிமா

4 நாட்கள்..10,00,00,000 பார்வையாளர்கள்…ஒரே நாளில் 5,50,00,000 பேர்…புதிய சாதனை படைத்தார் நடிகர் ஷாருக்கான்…!!

Published by
Dinasuvadu desk
ஒரே நாளில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படத்தின் டிரெய்லர் சாதனை..
அண்மையில் வெளியிடப்பட்ட நடிகர் ஷாருக்கானின் ஜீரோ பட டிரெய்லர், இதுவரை யூடியூபில் எந்த ஒரு இந்திய படத்தின் டிரெய்லரும் செய்திராத சாதனையை படைத்துள்ளது.பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் நடிப்பில் கிறிஸ்துமஸ் அன்று  வெளியாகவுள்ள திரைப்படம் தான் ஜீரோ. இதில் கத்ரினா கைஃப், அனுஷ்கா சர்மா, மாதவன், அபே தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் மற்றும் இரண்டு போஸ்டர்கள் வெளியான நிலையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியது.இந்நிலையில் ஷாருக்கானின் பிறந்த தினமான கடந்த நவம்பர் 2ஆம் தேதியன்று ஜீரோ படத்தின் டிரெய்லர், மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில் வெளியிடப்பட்டது.
இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 5.5 கோடி பார்வையாளர்கள்  பார்த்துள்ளனர். இதன் மூலம் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட இந்திய திரைப்படத்தின் டிரெய்லர் என்ற சாதனை புரிந்துள்ளது. இரண்டாவது நாளில் 8.5 கோடி  பார்வையாளர்கள் அதனை பார்த்திருந்தனர்.
தற்போது டிரெய்லர் வெளியான 96 மணி நேரங்களுக்குள் (4 நாட்கள்) அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கை 10 கோடியாக  உயர்ந்துள்ளது. இது மேலும் ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.இதன் மூலம் இதற்கு முன்னதாக படைக்கப்பட்ட அனைத்து சாதனைகளையும் ஜீரோ டிரெய்லர்  முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

7 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

7 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

7 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

7 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

8 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

8 hours ago