Categories: சினிமா

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா..!

Published by
Dinasuvadu desk

4 ஆண்டுகளுக்கு பின் நடிகை நஸ்ரியா நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல் டீசர் வெளியாகியுள்ளது.

வாயை மூடிப்பேசவும், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்த நஸ்ரியா கடந்த 2014-ம் ஆண்டு மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு தனது படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட நஸ்ரியா பெங்களூர் டேஸ் படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்கும் படத்தில் நடித்துள்ளார். மலையாள மொழியில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நடிகர் பிரித்விராஜ் நாயகனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பார்வதி மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.திருமணத்துக்கு பின் மீண்டும் நடிக்க வந்த நஸ்ரியா - டீசர் வெளியீடு

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஃபேஸ்புக்கில் டேக் செய்துள்ள பகத் பாசில், “ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும்போது, இது போன்ற உற்சாகத்தை என் வாழ்க்கையில் இதற்கு முன் பார்த்ததில்லை. அதற்குக் காரணம் நான்கு வருடத்துக்குப் பின் என் காதலுக்குரியவர் நடிக்கும் படத்தைப் பார்க்கப்போகிறேன் என்பதுதான் என தெரிவித்துள்ளார்.

மேலும் , நஸ்ரியா தன் குடும்பத்துக்காகத் தனது மதிப்பு மிக்க நான்கு வருடத்தைத் தியாகம் செய்திருக்கிறார். ஐ லவ் யூ நஸ்ரியா!” என்று தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள நஸ்ரியா, “கூடே எனக்கு ஸ்பெஷல் படம்” என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

6 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

14 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago