4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா..!
4 ஆண்டுகளுக்கு பின் நடிகை நஸ்ரியா நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல் டீசர் வெளியாகியுள்ளது.
வாயை மூடிப்பேசவும், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்த நஸ்ரியா கடந்த 2014-ம் ஆண்டு மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு தனது படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட நஸ்ரியா பெங்களூர் டேஸ் படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்கும் படத்தில் நடித்துள்ளார். மலையாள மொழியில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நடிகர் பிரித்விராஜ் நாயகனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பார்வதி மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஃபேஸ்புக்கில் டேக் செய்துள்ள பகத் பாசில், “ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும்போது, இது போன்ற உற்சாகத்தை என் வாழ்க்கையில் இதற்கு முன் பார்த்ததில்லை. அதற்குக் காரணம் நான்கு வருடத்துக்குப் பின் என் காதலுக்குரியவர் நடிக்கும் படத்தைப் பார்க்கப்போகிறேன் என்பதுதான் என தெரிவித்துள்ளார்.
மேலும் , நஸ்ரியா தன் குடும்பத்துக்காகத் தனது மதிப்பு மிக்க நான்கு வருடத்தைத் தியாகம் செய்திருக்கிறார். ஐ லவ் யூ நஸ்ரியா!” என்று தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள நஸ்ரியா, “கூடே எனக்கு ஸ்பெஷல் படம்” என்று தெரிவித்துள்ளார்.