Goat 3-rd single [file image]
கோட் : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படமான ‘கோட்’ திரைப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு குவிந்து கொண்டே வருகிறது. இது வரை இந்த படத்தின் ‘விசில் போடு’ மற்றும் ‘சின்ன சின்ன கண்கள்’ என 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நேற்றைய நாள் இப்படத்தின் 3-வது பாடலான ‘ஸ்பார்க்’ எனும் பாடல் நாளை அதாவது இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோவுடன் கூடிய ப்ரோமோவை வெளியிட்டிருந்தனர். இந்த ப்ரோமோ வெளியானது முதல் இந்த பாடலுக்கு எதிர்ப்பார்ப்பு எகிறிவிட்டதென்றே கூறலாம்.
அதற்கு மிக முக்கிய காரணம், யுவன் ஷங்கர் ராஜா இந்த பாடலை பாடியிருக்கிறார் என்பது தான். இந்த நிலையில் தற்போது இந்த பாடல் யூட்யூபில் வெளியாகி இருக்கிறது. யுவனின் துள்ளலான இசையில் இந்த பாடலை கேட்கும் போது திரையரங்கில் இந்த பாடல் வேறு ராகத்தில் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும், யுவனின் குரலும் மற்றும் கங்கை அமரனின் ஆங்கிலம் கலந்த தமிழ் வரிகளும் இந்த பாடலுக்கு மிகவும் பக்கபலமாய் அமைந்துள்ளது என்றே கூறலாம். தற்போது இந்த பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே பல்லாயிரம் பார்வையாளர்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது, மேலும் மிக விரைவாகவே மில்லியன் பார்வையாளர்களை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…