உலக நாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகரும் இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலை வைத்து “விக்ரம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரேன், நந்தினி, ஷிவானி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான பாடல்கள் மற்றும் ட்ரைலர் வரும் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதால், படத்திற்கான ப்ரோமோஷன் பண்ணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன்இயக்குனர் லோகேஷ் கனகராஜை பாராட்டியுள்ளார். அதற்கு நெகிழ்ச்சியில், கமலுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு அதில் “36 வருட தவம் எனக்குள் இருக்கும் இயக்குனரை என் உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்ட” என பதிவிட்டுள்ளார்.
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…
ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு (9ஆம்…
சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…