32 கிராமி விருது…புதிய வரலாற்று சாதனை படைத்த பாடகி பியோன்ஸே.!
அமெரிக்க பாடகி பியோன்ஸே 32 கிராமி விருதுகளை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
இசைத்துறையில் சிறந்த பாடல் ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர் என சாதனை படைத்தவர்களுக்கு கிராமி விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 65-வது கிராமி விருது வழங்கும் விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை ) லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. விழாவில் பலருக்கும் விருது வழங்கப்பட்டது.
இதில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகியான பியான்ஸே நோலஸ் 32-வது கிராமி விருதை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். முன்னதாக மறைந்த நடிகர் ஜார்ஜ் சோல்டி அதிகபட்சமாக 31 கிராமி விருதுகள் வாங்கி சாதனையை வைத்திருந்தார்.
அவரை தொடர்ந்து, பாடகி பியான்ஸே நேற்று 32-வது முறையாக வென்று மறைந்த நடிகர் ஜார்ஜ் சோல்டியின் சாதனையை முறியடித்து வரலாற்று புதிய சாதனை படைத்துள்ளார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக முறியடிக்கப்படாமலே இருந்த இந்த சாதனையை பியான்ஸே இந்த ஆண்டு முறியடித்துவிட்டார்.
பியான்ஸே இந்த முறை சிறந்த நடனம்/மின்னணு ஆல்பம் என்ற பிரிவில் ” Renaissance,” என்ற பாடலுக்காகவும், சிறந்த ஆர் பி பாடல்: “கஃப் இட்” பாடலுக்காக கிராமி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.