அடுத்த 5 ஆண்டுகளில் 3,000 கோடி…கேஜிஎப் தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு.!
கேஜிஎப் திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக மாறிய நிறுவனம் என்றால், அது ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தான். இந்த நிறுவனம் தொடர்ந்து பெரிய படங்களை மட்டுமே தயாரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ‘காந்தாரா’ படத்தை தயாரித்திருந்தது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’, பிருத்விராஜ் நடிக்கவுள்ள டைசன், ரிஷப் ஷெட்டி நடிக்கவுள்ள ‘ரிச்சர்ட் ஆண்டனி’,ஃபஹத் பாசில் நடிக்கவுள்ள ‘தூமம்’ மற்றும் ஸ்ரீ முரளி நடிக்கும் ‘பகீரா’ உள்ளிட்ட படங்களை தயாரிக்கிறது.
இந்த நிலையில், ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனைவர்க்கும் வாழ்த்து தெரிவித்துவிட்டு அடுத்த 5 ஆண்டுகளில் படங்களை தயாரிப்பதால் மூலம் 3,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்துள்ளது.