3 நாளில் 300 கோடி…மிரட்டும் ‘பதான்’ வசூல்.! மிரள வைக்கும் ஷாருக்கான்.!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஷாருக்கானின் பதான் திரைப்படம் கடந்த 25-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார்.
அதிரடி ஆக்சன் த்ரில்லர் படமான இந்த படத்தில் தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பதால் படத்தை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள்.
படமும் மிகவும் அருமையான அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்டதாக இருப்பதால் விமர்சன ரீதியாக படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் படம் பல சாதனைகளை படைத்தது வருகிறது. அந்த வகையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்ததாகவும், 2-வது நாளில் உலகம் முழுவதும் 220 கோடி வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது .
இந்த நிலையில், இதனை தொடர்ந்து படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. வெளியான 3 நாட்களில் 300 கோடி வசூல் செய்துள்ளது என்பது ஹிந்தி திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பது கிடைத்து வருவதால் வரும் நாட்களில் இன்னும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.