யாஷ் பிறந்தநாளுக்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி 3 பேர் பலி!
கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் யாஷ் இன்று தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்கள் பலரும் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பேனர் வைப்பது என கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் 3 ரசிகர்கள் யாஷின் பிறந்த நாளை முன்னிட்டு பேனர் வைக்கும் வேளைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் மூன்று பேரும் பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரமாண்டமாக அடிக்கப்பட்ட அந்த பேனரை வைக்க யாஷ் ரசிகர்கள் சிலர் குழுவாக சென்று பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்த சமயம் பேனர் மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து மூன்று பேர் உரிழந்தனர்.
விமான விபத்து: 2 மகள்களுடன் ஹாலிவுட் நடிகர் உயிரிழப்பு!
உடன் இருந்த 3 பேர்களும் காயம் ஏற்பட்டு தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடிகரின் பிறந்தநாளுக்கு பேனர் வைக்கும் போது உயிரிழந்த யாஷ் ரசிகர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிகையையும் வைத்துள்ளனர்.
யாஷ் பிறந்த நாள் அன்று இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதால் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு தங்களுடைய இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள்.