பேஸ் பேஸ்… வார இறுதியில் வெளியாகும் 3 திரைப்படங்கள்! ஒவ்வொன்றும் ஒரு ரகம்…
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன், தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், சமுத்திரகனி நடிக்கும் ‘ராமம் ராகவம்' ஆகிய 3 திரைப்படங்கள் நாளை (பிப்.21) வெளியாகின்றன.

சென்னை : வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்ட நாளாக அமைந்து விடுகிறது. நாளை ஒரே நாளில் 3 தமிழ் திரைப்படங்கள் வெளியாகிறது. மூன்றுமே ஒவ்வொரு ரகம் என்றே சொல்லலாம், சொல்லப்போனால் மூன்றுமே பார்க்கம்படி ரசிக்கும்படி அமைந்திருக்கிறது.
அதன்படி, நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன், தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், சமுத்திரகனி நடிக்கும் ‘ராமம் ராகவம்’ ஆகிய 3 திரைப்படங்கள் நாளை (பிப்.21) வெளியாகின்றன. இப்பொது ஒவ்வொன்றும் எந்த மாதிரியான கதையம்சம் கொண்டது என்று பார்க்கலாம்.
டிராகன்
பிரதீப் ரங்கநாதன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் ‘ டிராகன் ‘ படம், அதிரடி, கற்பனை மற்றும் காதல் ஆகியவை கலந்த ஒரு அற்புதமான கலவையை உறுதியளிக்கிறது. மொத்தத்தில் நகைச்சுவை கலந்த உணர்ச்சிபூர்வமான காதல் கதை என்றே சொல்லலாம். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாது லோஹர், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், ஜார்ஜ் மரியன், இந்துமதி மணிகண்டன், வி.ஜே.சித்து, ஹர்ஷத் கான் ஆகியோரும் நடித்துள்ளனர்.
NEEK
தனுஷ் இயக்கியுள்ள காதல் படமான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் ட்ரெய்லரில் இது வழக்கமான காதல் கதை தான் என சொல்லியே தொடங்குகிறார் தனுஷ். காதல், காதல் தோல்வி என போகும் காட்சிகள் ரசிகர்களின் ஆர்வத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு ‘வழக்கமான காதல் கதை’யை நாளை முதல் காணலாம். இந்த படத்தில் படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன் மற்றும் ரம்யா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ராமம் ராகவம்
சமுத்திரக்கனி மற்றும் தன்ராஜ் கொரானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் தெலுங்கு-தமிழ் இருமொழிப் படமான “ராமம் ராகவம்” படத்தின் கதையானது தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான ஒரு கடினமான உறவை இப்படத்தின் கதை எடுத்து காட்டுகிறது. இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன், சத்யா, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, பிருத்விராஜ், மோக்ஷா சென்குப்தா மற்றும் பிரமோதினி ஆகியோரும் நடிக்கின்றனர்.