Akhil Mishra [File Image]
பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்துள்ள ‘3 இடியட்ஸ்’ என்ற திரைப்படத்தில் நூலகர் துபே என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அகில் மிஸ்ரா இன்று (செப்டம்பர் 21) காலமானார்.
இந்த மரணச் செய்தியை அவரது மனைவியும் நடிகையுமான சுசானேயின் மேலாளர் உறுதிப்படுத்தினார். அகில் மிஸ்ரா சமையலறையில் ஏதோ வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, தவறி விழுந்ததில் அவர் உரிழந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அவரது மனைவி சுசானே பெர்னெர்ட் வீட்டில் இல்லையாம், ஹைதராபாத்தில் ஒரு படப்பிடிப்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு தகவலின் படி, அவர் சமையலறையில் நாற்காலியில் அமரும்பொழுது, தவறி கீழே விழுந்ததால் தலையில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவருக்கு அதிகப்படியான ரத்தம் கீழே சென்றதால், மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், உயிர் பிழைக்க முடியவில்லை, சில மணிநேரங்களுக்குப் பிறகு உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
பாலிவுட் சினிமாவில் அகில் மிஸ்ரா , டான், காந்தி மை ஃபாதர், சிகர் மற்றும் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், அவருக்கு ‘3 இடியட்ஸ்’ படத்தின் நூலகர் துபேயாக கதாபாத்திரம் ரசிகர்களால் பேசப்பட்டது. இந்த படங்களை தவிர, உத்தரன், சிஐடி, ஸ்ரீமான் ஸ்ரீமதி, ஹாதிம் மற்றும் பல பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்திருக்கிறார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…