‘தலைவர் 170’ படத்தில் இணைந்த 3 நடிகைகள்! வரிசைகட்டி வெளியான அறிவிப்புகள்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 படத்தில் மூன்று இளம் நடிகைகள் நடிக்க இருப்பதாக படக்குழு அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.
ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த படமான ‘தலைவர் 170’ படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்க, லைகா புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். இந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும், படத்தின் இயக்கம், இசை, தாயரிப்பு ஆகியவற்றை இந்த மூவரும் தான் கவனித்து வருவதாக நேற்றைய தினம் படக்குழு தனித்தனி போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில், இன்று இந்த படத்தில் மூன்று நடிகைகள் நடிக்க இருப்பதாக இன்று காலை முதல் வரிசையாக தனித்தனி போஸ்டர்களை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
அந்த அறிவிப்பின்படி, சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து பிரபலமான நடிகை துஷாரா விஜயன், இறுதி சுற்று நடித்து பிரபலமானநடிகை ரித்திகா சிங் மற்றும் அசுரன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் நடிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று நடிகைகளும் ரஜினியுடன் இணைவது இதுவே முதல் முறை, இயக்குனர் டி.ஜே.ஞானவேல் மற்றும் சூப்பர் ஸ்டார் கூட்டணியும் இது தான் முதல் முறை ஆகும். ஆனால், தலைவர் 170 படத்திற்கு இசையமைக்கும் அனிருத், ரஜினிகாந்த் உடன் இணைவது நான்காவது முறையை குறிக்கிறது.