முதலில் ‘காலா’வா? 2.O-வா ? எது முதலில் ரிலீஸ் : ரஜினி பதில்
சூப்பர் ஸ்டார் ரஜினி நிக்கும் 2.O மற்றும் காலா படபிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சங்கர் இயக்கத்தில் 2.O இரண்டு வருடங்களாக பிரமாண்டமாக எடுத்து வருகிறார்.
இந்நிலையில் 2.O ஜனவரி 25ஆம் தேதி வெளியாகாமல் தள்ளிபோகலாம் என தெரிகிறது.
இந்நிலையில் காலா படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஒரு செய்தி கோலிவுட்டில் வளம் வந்தது.
இதனை அப்பட தயாரிப்பு நிறுவனமான நடிகர் தனுஷின் வுண்டர் பார் நிறுவனம் இதை மறுத்துள்ளது. காலா படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என தெரிவித்துள்ளது.
இதனை பற்றி நேற்று ஏர்போட்டில் ரஜினியை பேட்டி எடுத்தபோது அவர் கூறியது ‘2.O தான் முதலில் வரும் எனவும்,அடுத்து தான் காலா படம் வரும் எனவும் ‘ கூறினார்.’