புஷ்பா 2 படத்தின் 2வது சிங்கிள் எப்போது? சூடான பாடலில் கலக்க போகும் ஸ்ரீவள்ளி.!
சென்னை: புஷ்பா 2 திரைப்படத்தின் ‘SOODAANA (The Couple Song)’ பாடல் மே 29-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் சுகுமார் இயக்கிய ‘புஷ்பா 2 : தி ரூல்’ படத்தின் இரண்டாவது பாடல் அறிமுக வீடியோவை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பாடல் மே 29ம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்கள் பாடலின் சிறிய கிளிப்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை துண்டியுள்ளனர். இந்த பாடல் ராஷ்மிகா நடித்த (ஸ்ரீவள்ளி) மற்றும் அல்லு அர்ஜுன் நடித்த (புஷ்பா ராஜ்) இருவரைது கதாபாத்திரத்தை காட்டுகிறது.
THE COUPLE SONG out on 29th May at 11.07 AM 👌#Pushpa2SecondSingle – #Sooseki (Telugu), #Angaaron (Hindi), #Soodaana (Tamil), #Nodoka (Kannada), #Kandaalo (Malayalam), #Aaguner (Bengali)
A Rockstar @ThisIsDSP Musical 🎵#Pushpa2TheRule Grand release worldwide on 15th AUG… pic.twitter.com/rigWYKOyYB
— Pushpa (@PushpaMovie) May 23, 2024
ஏற்கனவே, ‘புஷ்பா புஷ்பா’ என்ற முதல் சிங்கிள் மூலம் ரசிகர்களை கவர்ந்ததை அடுத்து, இரண்டாவது சிங்கிளை தற்பொழுது வெளியிட்டுள்ளனர். தமிழில் ‘சூடான’ என்கிற வரிகளில் தொடங்கும் இந்த பாடல் இதற்கு முன்னதாக, புஷ்பா படத்தில் இடம்பெற்றிருந்த ‘சாமி சாமி’ பாடலை போலவே இந்த பாடலும் இருக்கும் என தெரிகிறது.
இப்படம் தெலுங்கிலும், மற்ற தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும் ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியிடப்பட உள்ளது. இப்படத்தில் ஃபகத் பாசில், சுனில், அனசூயா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.