2K கிட்ஸ் கொண்டாடும் காதல் மூவி…பிரேமலு தமிழ் ட்ரைலர் வெளியீடு.!

Published by
கெளதம்

Premalu: மலையாள சினிமாவில் கடந்த மாதம் 9ம் தேதி வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ்  ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்கிறது. அதன்படி, மார்ச் 15ஆம் தேதி நாளை மறுநாள் இப்படம் தமிழக திரையரங்குகளில் வெளியாகிறது.

READ MORE – ஒருவழியாக முடிஞ்சது வழக்கு! நிம்மதி பெருமூச்சு விட்ட நடிகர் தனுஷ்!

காதல் கலந்த நகைச்சுவைப் படமான ‘பிரேமலு’ படத்தின் ட்ரைலரை தற்பொழுது ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சொல்லப்போனால், இந்த படத்தை இப்பொழுது 2K கிட்ஸ் கொண்டாடும் காதல் படமாக மாறியுள்ளது. தமிழில் அதுபோல் வேறே எந்த திரைப்படமும் இப்பொழுது வெளியாகவில்லை என்பதால், இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட முடிவு செய்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

READ MORE – அடுத்த ரூ.100 கோடி…மொழியைக் கடந்து கொண்டாடும் மல்லு திரைப்படம்.!

இயக்குனர் கிரீஷ் ஏடி எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை பாவனா ஸ்டுடியோஸ் மற்றும் ஃபகத் பாசில் அண்ட் பிரண்ட்ஸ் ஆகிய பேனர்கள் தயாரித்துள்ளன. இந்த படத்தில் நடிகை மமிதா பைஜு மற்றும் நஸ்லென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அவர்களை தவிர, சங்கீதா பிரதாப், அல்தாஃப் சலீம், ஷியாம் மோகன் எம், அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன் மற்றும் ஷமீர் கான் ஆகியோரும் நடித்துள்ளனர்.

Recent Posts

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

35 mins ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

60 mins ago

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

2 hours ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

3 hours ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

3 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

3 hours ago