2K கிட்ஸ் கொண்டாடும் காதல் மூவி…பிரேமலு தமிழ் ட்ரைலர் வெளியீடு.!
Premalu: மலையாள சினிமாவில் கடந்த மாதம் 9ம் தேதி வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்கிறது. அதன்படி, மார்ச் 15ஆம் தேதி நாளை மறுநாள் இப்படம் தமிழக திரையரங்குகளில் வெளியாகிறது.
READ MORE – ஒருவழியாக முடிஞ்சது வழக்கு! நிம்மதி பெருமூச்சு விட்ட நடிகர் தனுஷ்!
காதல் கலந்த நகைச்சுவைப் படமான ‘பிரேமலு’ படத்தின் ட்ரைலரை தற்பொழுது ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சொல்லப்போனால், இந்த படத்தை இப்பொழுது 2K கிட்ஸ் கொண்டாடும் காதல் படமாக மாறியுள்ளது. தமிழில் அதுபோல் வேறே எந்த திரைப்படமும் இப்பொழுது வெளியாகவில்லை என்பதால், இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட முடிவு செய்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
READ MORE – அடுத்த ரூ.100 கோடி…மொழியைக் கடந்து கொண்டாடும் மல்லு திரைப்படம்.!
இயக்குனர் கிரீஷ் ஏடி எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை பாவனா ஸ்டுடியோஸ் மற்றும் ஃபகத் பாசில் அண்ட் பிரண்ட்ஸ் ஆகிய பேனர்கள் தயாரித்துள்ளன. இந்த படத்தில் நடிகை மமிதா பைஜு மற்றும் நஸ்லென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அவர்களை தவிர, சங்கீதா பிரதாப், அல்தாஃப் சலீம், ஷியாம் மோகன் எம், அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன் மற்றும் ஷமீர் கான் ஆகியோரும் நடித்துள்ளனர்.