விக்ரம் படத்திலிருந்து விலகிய திரிஷா : காரணம் என்னவோ??!!
இயக்குனர் ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம் 2003, மே 1-ஆம் தேதி வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்ப்பை பெற்ற திரைப்படம்.
இதன் தொடர்ச்சியாக சாமி படத்தின் அடுத்த பாகமான சாமி ஸ்கொயர்-ஐ இயக்குனர் ஹரி இயக்க திட்டமிட்டார். இதில் நடிக்க சாமி முதல் பாகத்தில் நடித்த நடிகர் சியான் விக்ரம் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மேலும் பாபி சிம்ஹா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
அதன் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அப்படத்திலிருந்து நடிகை த்ரிஷா திடீரென விலகுவதாக சமூக வலைதலத்தில் பகிர்ந்துள்ளார்.இது படகுழுவினருக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.