அக்டோபர் 29ஆம் தேதியை குறிவைக்கும் விஜய் ரசிகர்கள் : ஏன்? எதற்கு?
தீபாவளியன்று வெளியான தளபதியின் மெர்சல் வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதில் வரும் வசனங்கள் மத்திய அரசை கலாய்க்கும் விதமாக உள்ளதால் பாஜக தலைவர்கள் பலரும் படத்திற்கு எதிர்ப்பு குறள் கொடுத்தது. இப்படதிற்கு மேலும் எதிபார்ப்பை கூட்டிவிட்டது.
இதனால் வசூலில் மாபெரும் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நெல்லை முத்துராம் சினிமாஸ் தியேட்டரில் வருகிற அக்டோபர் 29ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மெர்சல் படத்தின் சிறப்பு காட்சி ஒன்றை ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனை விஜய் மக்கள் இயக்கங்கள் ஒன்றாக இணைந்து இதனை நடத்துகின்றனர். இதனை ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சி போல கொண்டாடுங்கள் என ரசிகர்களுக்கு கூறிவருகின்றனர்.
இதன் முன்பதிவு தற்போது தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.