முதல் இடம் பிடித்தவர்களுக்கு 25,000..நடிகர் விஜய் வழங்க கூடிய கல்வி உதவித்தொகை பட்டியல் இதோ.!!
இன்று நடிகர் விஜய் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ் மற்றும் கல்விக்கான ஊக்கத்தொகையை வழங்கவுள்ளார்.
இதற்கான விழா விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இன்று சென்னை, நீலாங்கரையில் உள்ள ஒரு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. கல்வி விருது விழாவுக்கு திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இன்னும் சற்று நேரத்தில் இந்த விழா தொடங்கப்படவுள்ளது.
இதற்கிடையில், நடிகர் விஜய் வழங்க கூடிய கல்வி உதவித்தொகை பட்டியல் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி, முதல் இடம் பிடித்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் காசோலையாக வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சுமார் 4,500 பேர் வந்துள்ளனர். அவர்களுக்கு மதியான உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.