23 வருட பிளாக் பஸ்டர் கூட்டணி மீண்டும்.! தலைவருக்கு அடுத்த சூப்பர் ஹிட் ரெடி.!
நடிகர் ரஜினி அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இந்த படத்தின் முன்னகட்ட தயாரிப்பு பணியை விரைவில் நெல்சன் தொடங்கவுள்ளார். படத்திற்கு தற்காலிகமாக “தலைவர் 169” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் அல்லது ஜூலை மாதத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த தகவல்கள் பரவுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், இப்படத்தில் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யபட்டுள்ளதாக கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் செய்திகள் உலாவி வருகிறது.
இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
தற்போது மீண்டும் 23 வருடம் கழித்து மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிப்பதாக பரவும் தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் தலைவருக்கு அடுத்த சூப்பர் ஹிட் ரெடி எனவும் கூறிவருகிறார்கள்.