23 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்கள்!சீமராஜா படம் புதிய சாதனை
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘சீமராஜா’.இந்த படத்தில் சமந்தா, சிம்ரன் நடிக்கின்றனர். இப்படத்தில் இமான் இசையமைக்கிறார். இவர்களது கூட்டணியில் ஏற்கனவே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் வெளியாகி உள்ளது .இந்நிலையில் இந்த படத்தின் சிங்கிள் டிராக் நேற்று வெளியானது.
இந்த பாடலை திவாகர் மற்றும் கவிதா கோபி இமான் இசையில் பாடியுள்ளனர்.யுகபாரதி பாடல் எழுதியுள்ளார்.மேலும் இமான் இந்த பாடலை நேற்று மாலை 6 மணிக்கு வெளியிட்டார்.இந்நிலையில் 23 மணி நேரத்தில் 1,009,611 மில்லியனுக்கு மேற்பட்ட பார்வைகளை கடந்து சாதனை புதிய சாதனை படைத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.