நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் விமர்சக ரீதியில் கலவையான விமர்சனங்ளை பெற்றாலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை வந்த விஜய் படங்களிலேயே அதிக வசூல் பெற்ற திரைப்படமாக லியோ மாறிவிட்டது.
லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்த பல்வேறு தடைகள் எழுந்தது. இதனை தொடர்ந்து , படம் ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, மாபெரும் வசூல் வேட்டையாடி வருவதை கொண்டாடும் வகையில் லியோ வெற்றி விழா நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில் தளபதி விஜயை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து இருந்தனர். அதிலும் குறிப்பாக விஜயின் குட்டி கதைக்காக்கவும், அவர் பேசும் மற்ற சூசக பதில்களுக்காகவும் காத்திருந்தனர்.
ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே, பெரிதினும் பெரிது கேள் என வேடன் கதையை ரசிகர்கள் மத்தியில் கூறி கனவுகளை பெரிதாக காணுங்கள் என ரசிகர்களுக்கு அன்பான அறிவுரை கூறினார் தளபதி விஜய்.
அப்போது தொகுப்பாளினி 2026 பற்றி கூறுங்கள் என மறைமுகமாக 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பற்றி கேட்க, அதற்கு சட்டென 2026 உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியை குறிப்பிடுவது போல, “கப்பு முக்கியம் பிகிலு” என மறைமுகமாக அரசியல் குறித்த கேள்விக்கு தனது ஸ்டைலில் பதில் கூறினார் தளபதி விஜய்.
மேலும், அவர் பேசுகையில், தளபதி என்றால் என்ன அர்த்தம். நீங்கள் (ரசிகர்கள்) மன்னர்கள். நான் உங்கள் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன் என தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தை சூசகமாக கூறினார் நடிகர் விஜய்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…