2025 ஆஸ்கார் விருதுகள்! 5 விருதுகளை தட்டி தூக்கிய அனோரா!
97வது ஒஸ்கார் விழாவில் சிறந்த திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்குநர், நடிகை. திரைப்படம் என மொத்தமாக 5 விருதுகளை வாங்கியுள்ளது.

லாஸ் ஏஞ்செல்ஸ் : ஆண்டுதோறும் சிறந்த திரைக்கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் ஆஸ்கர் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டும் அமெரிக்கா லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ள டால்பி அரங்கில் நடைபெற்று வருகிறது. 97வது ஆஸ்கர் விருது விழாவில் விருது வென்றவர்களின் விவரங்கள் இன்று காலை 5.30 மணி (இந்திய நேரப்பபடி) முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அப்படி அறிவிக்கப்பட்டதால் எந்த படம் அதிகமான விருதுகளை வென்றது என்பது பற்றியும் அந்த படம் என்னென்ன விருதுகளை வென்றுள்ளது என்பது பற்றியும் பார்ப்போம். அது என்ன திரைப்படம் என்றால் இயக்குநர் ஷான் பேக்கர் (Sean Baker) இயக்கத்தில் வெளிவந்த ‘அனோரா’ (Anora) திரைப்படம் தான். இத்திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. ஆனால், விமர்சன ரீதியாக பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது.
இந்த நிலையில், இந்த படத்திற்கு ஆஸ்கர் விருதுகளில் 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- சிறந்த திரைப்படம் (Best movie)
- சிறந்த நடிகை (Best Actress) – மைக்கி மாடிசன் (Mikey Madison)
- சிறந்த இயக்குனர் (Best Director) – ஷான் பேக்கர் (Sean Baker)
- சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட திரைக்கதை (Best Original Screenplay)
- சிறந்த படத்தொகுப்பு (Best Film Editing)