அமீர் கான் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியான “லால் சிங் சத்தா” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது என்றே கூறலாம். வசூல் ரீதியாகவும் இந்த படம் பெரிய தோல்வியை சந்தித்த்து. இந்த நிலையில், பிரபல நடிகையான கங்கனா ரனாவத் சமீபத்திய பேட்டி ஒன்றில் “லால் சிங் சத்தா” படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் “என்னுடைய கேள்வி ஒன்றே ஒன்று தான் மக்கள் எதற்காக கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அமீர் கானின் “லால் சிங் சத்தா” போன்ற படங்களைப் பார்ப்பதற்காக எதற்காக செலவிட வேண்டும் என்பதுதான். 2 கோடி ரூபாய்க்கு நடிப்பை கொடுத்து விட்டு 200 கோடி ரூபாயை அவர் வாங்கிக் கொள்கிறார். எத்தனை தோல்விகள் வந்தாலும் அவர் தனது படங்களுக்கு 200 கோடி ரூபாய் வாங்கிக்கொள்கிறார்.
சினிமா துறையில் இந்த அநியாயமான நடைமுறை இன்னும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று எனக்கு தெரியவில்லை. “லால் சிங் சத்தா” திரைப்படம் தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் அமீர்கானின் பேச்சுதான் முதல் காரணம். சூப்பர் ஸ்டாருக்குள்ள எல்லா சலுகைகளையும் அமீர்கான் பெற்றுகொள்கிறார் .
இதையும் படியுங்களேன்- அச்சசோ … பார்வையாலே இளசுகளை கிறங்கடித்த அணு…கிறுகிறுக்க வைக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.!
தனி விமானத்தில் தான் அவர் பயணிக்கிறார். உலகத்தின் முன்னால் நமது நாட்டை சகிப்புத்தன்மையற்றது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சொல்லி களங்கப்படுத்தினார். ஒரு படம் தோல்வியடைந்தால் சம்பளத்தை குறைக்காமல் இருப்பது நியாயாமே இல்லை” என அமீர்கானை விமர்சித்துள்ளார் நடிகை கங்கனா ரணாவத்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…