அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி 200 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக கடந்த 2019- ஆம் ஆண்டு சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், மோசடி பணத்தில்சுகேஷ் சந்திரசேகர் இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்ததாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதனையடுத்து, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு நடிகை ஜாக்குலின் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடிகை ஜாக்குலின் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சைலேந்தர் மாலிக், 50,000 ரூபாய் சொந்த பிணையில் நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, 200 கோடி ரூபாய் மோசடி தொடர்பான இந்த வழக்கின் விசாரணை வரும் அக்டோபர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…