200 கோடி பண மோசடி வழக்கு : நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ்-க்கு ஜாமீன்..!
தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றி சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி பறித்தது தொடர்பான வழக்கில், பிரபல இந்தி நடிகையான ஜாக்குலின் மீதும் குற்றச்சாட்டு இருந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையும் மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து, கைது நடவடிக்கையில் தப்பிக்கவேண்டும் என்பதற்காக, தனக்கு இடைக்கால ஜாமினை வழங்குமாறு நடிகை ஜாக்குலின் தரப்பில் டில்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த அந்த மனுவை விசாரித்த நீதிபதி ரூ. 50 ஆயிரம் பிணைய தொகை செலுத்த உத்தரவிட்டு, இடைக்கால ஜாமீனை நவம்பர் -15 வரை நீட்டித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிடுவதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ரூ 200 கோடி பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ்-க்கு இன்று ஜாமின் வழங்கியது டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம். நவம்பர் -15ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கிய நிலையில் , மீண்டும் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.