வசூல் மன்னன் என்று நிருபித்த தளபதி விஜய் !மெர்சல் 200 கோடி வசூல்!
இளைய தளபதி விஜய் நடித்து கடந்த தீபாவளிக்கு வெளியான திரைபடம் மெர்சல் இந்த படம் வெளியான பிறகும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது. குறிப்பாக பா.ஜ.க.வினரால் மட்டும் படத்திற்கு பிரச்சினை ஏற்பட்டது.ஆனால் என்னதான் நடந்தாலும் படம் எந்த வித சறுக்கலும் இல்லாமல் படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.வசூலை பொறுத்தவரையில் படம் அனைத்து விதமான சாதனைகளையும் முறியடித்து வருகிறது .குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் மட்டும் படம் நூறு கோடியை 11 நாட்களில் தாண்டியது .ஆனால் இன்னொரு சாதனை என்னவென்றால் படம் 200 கோடி வந்துள்ளது. இது 12 நாட்களிள் இந்த சாதனையை படைத்துள்ளது .தென் இந்தியாவை பொறுத்தவரை மூன்று படங்கள் மட்டும் 200கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.அதில் மெர்சல் புதிதாக சேர்ந்துள்ளது.இதில் என்னவென்றால் தளபதி விஜய் நடித்துள்ள 5 படங்கள் நூறு கோடியை தாண்டியுள்ளது.இது தான் அவரது முதல் இருநூறு கோடி படம் ஆகும்.இது மேலும் பல்வேறு சாதனைகளை படைக்கும் என்று பல்வேறு கருத்துகள் கூறுகின்றனர்.