ரொம்ப கஷ்டமா இருக்கு…அறியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அனுஷ்கா.!
நடிகை அனுஷ்கா தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்து கொண்டிருந்த சமயத்தில் இஞ்சு இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகமாக்கினார். எனவே அந்த படத்தில் இருந்தே அவருக்கு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை என்றே கூறலாம்.
அப்படி இருந்தும் கூட அனுஷ்காவுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. மேலும் 35 வயதாகியும் அனுஷ்கா இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இதற்கிடையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து நேர்காணலில் பேசிய அனுஷ்கா ” எனக்கு ஏதேனும் சமயங்களில் சிரிக்க வேண்டிய சூழ்நிலைகள் வந்தால் சிரிப்பேன். அப்படி நான் சிரிக்க ஆரம்பித்தால், அதனை கட்டுப்படுத்தவே முடியாது. ஏனென்றால், தொடர்ந்து 20 நிமிடங்கள் வரை சிரித்துக் கொண்டே இருப்பேன்.
இதனால் படப்பிடிப்பு இருக்கும் சமயத்தில் பலமுறை சிரித்துக்கொண்டே படப்பிடிப்பை நிறுத்த வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது” என சற்று வேதனையுடன் பேசியுள்ளார். மேலும் நடிகை அனுஷ்கா தற்போது நவீன் பாலிஷெட்டியுடன் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.