2.O பிரமாண்டம் ஹிந்தியில் மட்டுமே இத்தனை கோடியை வசூலித்துள்ளது! சூப்பர் ஸ்டாருக்கு இதுவே முதல் முறை!!!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடித்து கடந்த வாரம் ரிலீஸான திரைப்படம் 2.O. இத்திரைப்படத்தை லைகா பிரமாண்டமாக தயாரித்து சுமார் 10,000 திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸானது.
இப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. முதல் நான்கு நாட்களிலே 400 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இப்படத்தின் திங்கள் கிழமை வசூலும் வெளியாகியுள்ளது. திங்கள் கிழமை வசூல் சேர்த்து பாலிவுட்டில் மட்டுமே இப்படம் 100 கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளது. தமிழ் டப்பிங் படம் பாலிவுட்டில் நூறு கோடி ரூபாய் வசூல் செய்தது இதுவே முதல் முறை! அக்ஷ்ய் குமாருக்கு நூறு கோடியை தாண்டுவது 10வது முறை!!
source : cinebar.in