2.O டீசர் இன்னும் ரெடி ஆகவில்லை : படக்குழு தெரிவித்த தகவல்கள்
நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் 2.O டிசர் திருட்டுத்தனமாக வெளியானதுபற்றித்தான் பேச்சு. ஏனெனில் இது இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படம். இப்படத்தின் பட்ஜெட் சுமார் நானூறு கோடி ரூபாய்.
இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய் குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படபிடிப்பு முழுவதும் நிறைவடைந்து இப்படத்தின் VFX பணிகள் நடைபெற்றுவருகிறது. இப்படம் எப்போ வரும் என்று படத்தில் நடித்தவர்களுக்கே சரியாய் தெரியவில்லை.
இந்நிலையில் இதன் டீசர் என்று நேற்று சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி உள்ளது. இதனால் படகுழு அதிர்ச்சியானது. இதனை குறித்து இப்படத்தின் VFX பணிகளை மேற்கொள்ளும் ஸ்ரீ நிவாஸ் மோகன் கூறுகையில், 2.O ஒப்பிடுகையில் எந்திரன் டீசர்தான். நேற்று வெளியான வீடியோ டீசர் அல்ல. இப்படத்தின் டீசர் இன்னும் முழுமையடையவில்லை அது நிறைவடைந்ததும் நாங்களே வெளியிடுவோம் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.