கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!
கேரளாவில் கஞ்சா வைத்திருந்ததாக மலையாள திரைப்பட இயக்குநர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா : சமீபத்தில் ஹிட்டான ‘ஆலப்புழா ஜிம்கானா’, ‘தள்ளுமாலா’ படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளனர். கொச்சியில் நடைபெற்ற சோதனையில், 1.6 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது, மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
கேரள கலால் துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு நடத்திய சோதனையில், பிரபல மலையாள திரைப்பட இயக்குநர்கள் காலித் ரஹ்மான் மற்றும் அஷ்ரப் ஹம்சா ஆகியோர் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்தனர்.
புதிய திரைப்படம் தொடர்பாக உரையாடலுக்காக அந்த மூவரும் பிளாட்டில் கூடியிருந்தபோது, ஒரு ரகசிய தகவலின் பேரில் கலால் அதிகாரிகள் திடீரென சோதனை நடத்திய பொது, அதிகாலை 2 மணியளவில் இருவரும், ஒரு நண்பருடன் சேர்ந்து, 1.5 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், குறைந்த அளவு கஞ்சா வைத்திருந்ததால் சில மணி நேரத்திலேயே, அந்த மூவரும் ஜாமினில் வெளிவந்துள்ளனர். ஏற்கனவே, நடிகர் ஷைன் டாமும் போதைபொருள் வழக்கில் சிக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்துள்ள காலித் ரகுமான், உண்டா, தள்ளுமலா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தமாஷா, சுலைகா மன்ஜில் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் அஷ்ரப் ஹம்சா.