அடுத்தடுத்த மாதங்களில் ரிலீஸ் ஆகும் ஜெயம் ரவியின் 2 படங்கள்.!

Published by
பால முருகன்

நடிகர் ஜெயம் ரவி தற்போது இயக்குனர் அஹமத் இயக்கத்தில் உருவாகி வரும் இறைவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தொடர்ச்சியாக அடுத்த அடுத்த மாதங்களில் ஜெயம் ரவி நடித்த படங்கள் வரிசையாக வெளியாகவுள்ளது.

Iraivan jayam ravi
Iraivan jayam ravi [Image Source : Google ]

அதன்படி, அவர் தற்போது இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் நடித்துள்ள  “அகிலன்” திரைப்படம் வருகின்ற மார்ச் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று போஸ்டருடன் வெளியாகி இருந்தது.

AgilanFromMarch10 [Image Source : Google ]

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக,  ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்  பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “பொன்னியின் செல்வன் 2 ” திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம்,  மலையாளம்,  இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Ponniyin Selvan Part 2 New Update
[Image Source : Twitter]

எனவே, மார்ச் 10 அகிலன் திரைப்படமும், ஏப்ரல் 28 பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் என தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஜெயம் ரவி நடித்த 2 படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், இவர் தற்போது நடித்து வரும் இறைவன் திரைப்படமும் இந்த ஆண்டு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

நிரந்தரமாக மூடப்பட்ட ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம்! இனி உச்சம் பெறுமா அதானி பங்குகள்?

நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு  ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…

16 minutes ago

வெற்றி., வெற்றி! சாதனை படைத்த இஸ்ரோ.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…

38 minutes ago

304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! அயர்லாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்த இந்தியா!

ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…

1 hour ago

பரபரப்பு!! பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!

மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…

1 hour ago

Live: களைகட்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல்… இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் வரை.!

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…

2 hours ago

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!

மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…

3 hours ago