2.0 படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா…?
சூப்பர்ஸ்டார் நடித்த 2.0 படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்நிலையில், 2.0 டீசர் படம் வெளியிடும் நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், தொடக்கத்தில் இந்த படத்திற்கான பட்ஜெட் 450 கோடி தான் என இருந்தது. ஆனால் இப்போது இதற்கு 600 கோடி செலவு ஆகியுள்ளது என தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் கண்டிப்பாக பயனுள்ள தகவல்கள் இருக்கும் என நம்பப்படுகிறது.