2.0 மேக்கிங் வீடியோ வெளியீடு…!
அக்ஷய்குமார் தன் கதாபாத்திரத்துக்கான மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்சய்குமாரும் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை.
கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தின் டீசர் வெளியானது.அதேபோல் நவம்பர் 3 ஆம் தேதி டிரைலர் வெளியானது.
இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியது.இதை பட தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டது.மேலும் 2.0 திரைப்படம் இம்மாதம் 29-ம் தேதி வெளியாகிறது.
My look in #2Point0 is nothing short of a technological wonder! Watch to know how it was brought to life.@2Point0Movie @shankarshanmugh @DharmaMovies @LycaProductions #2Point0FromNov29 pic.twitter.com/NfUfUPb2L1
— Akshay Kumar (@akshaykumar) November 16, 2018
இந்நிலையில் நடிகர் அக்ஷய்குமார் தன் கதாபாத்திரத்துக்கான மேக்கிங் வீடியோவை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.