2ஜி- திருட்டுபயலே 1 , சசிகலா திருட்டுபயலே 2 : நடிகர் சித்தார்த் கலாய்
2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது, இதில் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் குற்றவாளி அல்ல என தீர்பளித்து நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.
இதனை குறித்து நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர், ‘ராசா கனிமொழி நடிப்பில் திருட்டுபயலே-1 படத்திற்கான விமர்சனம் இன்று வெளியாகிறது. சசிகலா குழுவினர் நடித்த திருட்டுபயலே-2 போலவே இந்த படத்துக்கான விமர்சனமும் நன்றாகவே இருக்கும் என நம்புகிறேன்.’ என டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அனால், அந்த தீர்ப்பு விடுதலை என்று வந்ததும் அந்த டிவிட்டை நீக்கி ‘தீர்ப்பு சூப்பர் ஹிட் செய்தி’ என டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.