#1YearOfLoveToday: சொல்லுங்க…மாமா குட்டி! ஓராண்டை நிறைவு செய்யும் ‘லவ் டுடே’ திரைப்படம்!
சினிமாவுக்குள் ‘கோமாளி’ படம் மூலமாக இயக்குனராக ஒரு மாறுபட்ட படத்தை வழங்கி வியக்க வைத்தவர் பிரதீப். இதனை தொடர்ந்து, தனது இரண்டாவது படத்தில் துணிச்சலாக, நம்பிக்கையுடன் இயக்கி, நடித்தும் நாயகனாகவும் அறிமுகமாகி தமிழ் ஹிரையுலகை மிரளவைத்தார் பிரதீப் ரங்கநாதன்.
கடந்த 2022-ஆம் ஆண்டு “லவ் டுடே” திரைப்படம் இதே நாளில் (நவம்பர் 4-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. 2k ஹிட்ஸ்களை கவரும் வகையில், இன்றயை காலகட்டத்தில் நடக்கும் காதலை மையமாக வைத்து காமெடிகளை சேர்த்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி திரைப்படமாக அறிவிக்கப்பட்டது.
லவ் டுடே
கோமாளி திரைப்பட வெற்றிக்கு சொந்தக்காரரான இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மேலும் இந்த படத்தில் இவானா, ரவீனா ரவி, ராதிகா சரத்குமார், ஆதித்யா கதிர், அஜீத் காலிக், யோகி பாபு, சத்யராஜ், பிராத்தனா நாதன் உள்ளிட்டோர் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
படுக்கையறை காட்சியில் நடிக்க நான் ரெடி! ‘பட்டாஸ்’ பட நடிகை பரபரப்பு பேட்டி!
மாபெரும் வெற்றி
படத்தின் இயக்கம், கதை, இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு, நகைச்சுவை, வசனம் என அனைத்தும் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பாஸிட்டிவ் விமர்சனங்களை பெற்று பாராட்டுக்களை குவித்தது.
குறிப்பாக, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “சொல்லுங்க மாமா குட்டி” மாபெரும் வரவேற்பை பெற்றது, இது படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இன்று வரை இந்த பாடல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும்.
இப்படி மாபெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இந்த படத்தின் தமிழ்ப் பதிப்பின் அதே தலைப்பில், தெலுங்கு உரிமையை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வாங்கி வெளியிட்டது. தமிழில் எவ்வாறு வரவேற்பு பெற்றதொ அதேபோல் தெலுங்கிலும் வரவேற்பு கிடைத்தது.
நீ முதலில் கிளம்பு! ரத்னகுமார் பேசியதற்கு செம கடுப்பான நடிகர் விஜய்?
லவ் டுடே பாக்ஸ் ஆபிஸ்
லவ் டுடே திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிக்பெரிய வெற்றியை பெற்றது. அது மட்டும் இல்லாமல், வசூல் ரீதியாகவும் ஹிட் அடித்தது. படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.6 கோடிக்கு மேல் வசூலித்தது. பின்னர், 10 நாட்களை கடந்த பின், ரூ.50 கோடிகளை வசூலித்து சாதனைப்படைத்து.
தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. வெறும், 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 100 நாட்கள் படம் திரையரங்குகளில் ஓடி, சுமார் 125 ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.