18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!
மலையாள நடிகர் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் கதாபாத்திரங்களை நாளை முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
![L2E EMPURAAN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/L2E-EMPURAAN.webp)
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் கதாபாத்திரங்களை நாளை முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக படக்குழு அறிவிப்பு. மலையாளத் திரைப்படமான “எம்புரான்” படம் மலையாளத் தவிர்த்து தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என மொத்தம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
அதன்படி, இந்தப் திரைப்படம் மார்ச் 27ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், நாளை முதல் 18 நாட்களில் இப்படத்தில் நடிக்கும் 36 கதாபாத்திரங்களின் தோற்றம் வெளியிடப்பட இருப்பதாகவும், காலை 10 மணிக்கு ஒரு கதாபாத்திரத்தின் போஸ்டரும் மாலை 6 மணிக்கு மற்றொரு ஒரு கதாபாத்திரத்தின் போஸ்டரும் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Meet the characters of #L2E EMPURAAN and hear the actors who portrayed them speak about the experience! 36 characters, 18 days! Every day 10 am IST and 6pm IST, starting from tomorrow!
Malayalam | Tamil | Hindi | Telugu | Kannada #March27 @mohanlal
#muraligopy @antonypbvr… pic.twitter.com/k33Aq3Tzq3— Prithviraj Sukumaran (@PrithviOfficial) February 8, 2025
பிருத்விராஜ் தற்போது படத்தின் விளம்பரப் பணிகளில் மும்முரமாக இருக்கிறார். சமீபத்தில், இந்தப் படம் ஐமாக்ஸிலும் வெளியிடப்படும் என்று பிருத்விராஜ் சூசகமாகக் கூறினார். படம் ஐமேக்ஸ் திரைகளில் வந்தால், வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றன. மேலும், இந்தப் படத்திற்கு தீபக் தேவ் இசையமைக்க, அகிலேஷ் மோகன் படத்தொகுப்பு செய்துள்ளார், சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் உட்பட, ரசிகர்களை கவரும் அனைத்தும் படத்தில் இருக்கும் என்பதை முன்னதாக வெளியான டீசர் எடுத்து காட்டுகிறது.
டீசரை வைத்து பார்க்கும் பொழுது, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த படம், லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என தெரிகிறது. அதன்படி, இந்தப் படம் ஆபிராம் குரேஷி அல்லது ஸ்டீபன் நெடும்பள்ளியின் பழைய வாழ்க்கையை பற்றி விவரிக்கும் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
அந்த வகையில், லூசிஃபர் படத்தின் நடிகர்களான மோகன் லால் தவிர, மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், சானியா அய்யப்பன், சாய் குமார், இந்திரஜித் சுகுமாரன் மற்றும் பைஜு ஆகியோருடன், இந்தப் படத்தில் சூரஜ் வெஞ்சாரமூடு, ஷைன் டாம் சாக்கோ, ஷராபுதீன் மற்றும் அர்ஜுன் தாஸ் போன்ற புதுமுக நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.