18 வருடம் காத்திருந்த திரையுலகம்….!!என்ட்ரீ கொடுத்த ஸ்கேட்ச்…!!!

Default Image

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் விக்ரம் இவர் 18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாளத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Image result for vikram

இயக்குநர் கவுதம்மேனன் இயக்கி வரும் துருவ நட்சத்திரம் மற்றும்  ராஜேஷ் எம்.செல்வா இயக்கி அந்த படத்தில் நடித்து வரும் நடிகர் விக்ரம் இந்த படங்களை தொடர்ந்து அடுத்து வரலாற்றுப் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் அன்வர் ரஷித் இயக்குகிறார்.
Image result for vikram
இந்த வரலாற்று படமாக உருவாக இருக்கும் மலபார் கலகம் அல்லது மாப்பிள்ளை கலகம் என்று அழைக்கப்படும் வரலாற்று கதையை அடிப்படையாக கொண்டு தான் இப்படம் உருவாகிறது. கேரளாவில் மலபார் பகுதியில் அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயே அரசுக்கு எதிராக தொடங்கிய இந்த கலகம் பிறகு பெரும் இனக்கலவரமாக மாறியது.இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். 1921-ம் ஆண்டு நடந்த வரலாற்றை  தழுவிய இந்த சம்பவத்தை அன்வர் ரஷித் படமாக்குகிறார்.இந்தக் கதையில் சுதந்திரப் போராட்ட வீரர் வரியன்குன்னத் குஞ்சாசமாகத் ஹாஜியாக நடிகர் விக்ரம் நடிக்கிறார்.
Image result for vikram
மலபார் கலகத்தின் நூற்றாண்டு விழா வரவுள்ள நிலையில் 2021-ஆம் ஆண்டு இந்த படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரலாற்று படம் மூலம் நடிகர் விக்ரம் 18 வருடங்களுக்குப் பிறகு, மலையாள சினிமாவில் நுழைய உள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest