பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது RC-15, இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களை ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார். இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ராம் சரண் நடிக்கும் RC-15 திரைப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.
இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்- இது பிட்டு படம் இல்லப்பா.. அப்படி செய்ய அவசியமில்லை.! மன்மதலீலை ஹீரோவின் அதிரடி பதில்..
இந்த திரைப்படத்திற்கான அடுத்தகட்ட படப்பிடிப்பு நியூசிலாந்தில் விரைவில் தொடங்கப்படவுள்ளது. அங்கு பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கப்ப டவுள்ளதாக கூறப்டுகிறது. மேலும் இப்பாடல் காட்சிக்கு மட்டுமே சுமார் ரூ. 15 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வழக்கமாக ஷங்கர் இயக்கும் படங்கள் எந்த அளவிற்கு பிரமாண்டமாக இருக்கிறதோ அதே போல் அவருடைய படத்தில் இடம்பெறும் பாடல்களும் மிகவும் பிரமாண்டமாக இருக்கும். எனவே இந்த பாடலை எடுக்க 15 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக பரவும் தகவலால் பாடல் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் ஏற்கனவே, இந்த படத்தின் ஒரே ஒரு ஆக்ஷன் காட்சிக்காக ரூ. 10 கோடி செலவு செய்யப்பட்டதாக ஒரு தகவல் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…