நடிகையின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக தாய் குற்றச்சாட்டு !15 வருடங்களுக்கு பிறகு பேட்டி..

Default Image
Image result for prathyusha
   
பிரதியுஷா தற்கொலை செய்யவில்லை. அவளை பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டனர் என்று நடிகை பிரதியுஷாவின் அம்மா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழில் ‘மனுநீதி’, ‘தவசி’, ‘சவுண்ட் பார்ட்டி’ என சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர், பிரதியுஷா. நடிகை பிரதியுஷா தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2002ம் ஆண்டு தன் காதலருடன் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் உயிருக்குப் போராடிய காதலன் பிழைத்துவிட்டார். இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதியுஷாவின் அம்மா ஹைதராபாத்தில் பேட்டியளித்துள்ளார்.

அதில் ‘‘என் மகள் தற்கொலை செய்யவில்லை. விஷமும் குடிக்கவில்லை. அவளை நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு அவளின் வாயில் விஷத்தை தடவி நாடகத்தை நடத்தியுள்ளனர். அதற்கான காயங்கள், நகக் கீரல்கள் அவளின் உடல் முழுவதும் காணப்பட்டது. ஆனால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள் என வழக்கை முடித்துவிடுவார்கள். குற்றவாளிகள் விடுதலையாவார்கள். ஆண்டவன் அவர்களை தண்டிப்பான். 15 வருடமாக தீர்ப்பு கிடைக்கும் என போராடிவரும் எனக்கு யாருடைய ஆதரவும் இல்லை’’ என பிரதியுஷாவின் அம்மா கதறி அழுதுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news
[File Image]
Robin uththappa
smriti mandhana SCORE
TN RAIN
MK stalin
pm modi mk stalin