காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு புது வீடு வாங்கியுள்ளதாக நடிகை பிரியா பவானி சங்கர் நெகிழ்ச்யுடன் பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரையில் சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில், கலக்கி கொண்டிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தனது 14 ஆண்டு காதலரை புகைப்படங்களை வெளியீட்டு அறிவித்துள்ளார். கடற்கரையில் காதலர் முத்தம் கொடுப்பது போல அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த செய்தி மட்டுமின்றி, மற்றோரு சந்தோச செய்தியாக புதிதாக வீடு வாங்கியுள்ளதையும் சேர்த்து அறிவித்துள்ளார். இது குறித்து பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாவில் “18 வயதில் ஆசைபட்டு, தற்போது நமது புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கப்போகிறோம்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்களேன்- படப்பிடிப்பில் தனுஷை அடித்த செல்வராகவன்… ! அதிர்ச்சி சம்பவத்தை கூறிய பிரபல இயக்குனர்…
இதனால் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறப்போகிறதா..? என ரசிகர்கள் குழம்பினார். அதற்கும் விளக்கம் கொடுத்த பிரியா இது புதுமனை புகுவிழா நிகழ்ச்சிதான் என தெளிவுபடுத்தியுள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு சந்தோஷமான செய்தியை சொன்ன பிரியா பவானி சங்கருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது இந்தியன் 2, பத்து தல, அகிலன், ருத்ரன், உள்ளிட்ட பெரிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…