விக்னேஷ் சிவன் உடன் பிறந்தநாள் கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்!!!
தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்திற்கு தகுதியான நபர். அந்தளவிற்கு தான் சோலோ ஹீரோயினாக நடித்த மாயா, டோரா, அறம், இமைக்கா நொடிகள் என ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் இவரது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வெகுவாக கொண்டாடி வருகின்றனர். இவர் தெலுங்கில் சீரஞ்சீவியுடன் நடித்து வரும் பிரமாண்ட படமான சைரா நரசிம்ம ரெட்டி பட்த்தில் இவரது கேரக்டர் மோஷன் போஸ்டர் பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டது.
இவர் இன்று தனது பிறந்தநாளை தனது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் கொண்டாடியுள்ளார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.
source : cinebar.in