ராட்சச நடிகரின் அடுத்தப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நல்ல நடிகர் விஷ்ணு விஷால். ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படங்களை தொடர்ந்து விஷ்ணுவின் நடிப்பில் கடைசியாக வெளியான ராட்சசன் படம் வரை நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து பெயர் பெற்று வருகிறார்.
இதனை தொடர்ந்து அவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் சிலுக்காவார்பட்டி சிங்கம். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது ரிலீஸூக்கு ரெடியாகி உள்ளது. இப்படத்தை செல்லா அய்யாவு என்பவர் இயக்கி வருகிறார். ரெஜினா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ஓவியா முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் என்பவர் இசையமைக்கிறார். இப்படத்தை நடிகர் விஷ்ணு விஷாலே தயாரித்துள்ளார். இப்படம் டிசம்பர் 21 இல் வெளியாகும் என தற்போது படக்குழு அறிவித்துள்ளது. source: CINEBAR
DINASUVADU