LEO FDFS: சிங்கம் இறங்குனா காட்டுக்கே விருந்து…1000 பேருக்கு விலையில்லா பிரியாணி.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் லியோ படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு விஜய் ரசிகர்களின் ‘விலையில்லா விருந்தகம்’ சார்பில் பிரியாணி தயார் செய்து அசத்தியுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் காட்சி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அதிகாலை 4 மணிக்கும் 5 மணிக்கும் திரையிடப்பட்டது. ஆனால், தமிழகத்தில் பல கட்டுப்பாடுகளுடன் 9 மணியளவில் லியோ திரைப்படம் வெளியானது.
லியோ திரைப்படம் வெளியாவதை ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் கடந்த ஒருவாரமாகவே கொண்டாடி வருகின்றனர். பெரிய எதிர்பார்ப்புக்கு வெளியாகியுள்ள இப்படம் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வெற்றிபெற நடிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், முதல் காட்சியை காண முக்கிய திரை பிரபலங்கள் பலரும் தியேட்டருக்கு வந்த வண்ணம் உள்ளார்கள்.
அந்த வகையில், இன்று காலை திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வெளியே மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 9 மணியளவில் லியோ திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
LEO Review : பரபர ஆக்சன்… பக்கா மாஸ்.! தளபதி விஜயின் லியோ எப்படி இருக்கு.?
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாபு திரையரங்கில் நடிகர் விஜய் ரசிகர்களின் ‘விலையில்லா விருந்தகம்’ சார்பில் 1000 பேருக்கு வழங்க தடபுடலாக தயாரானது பிரியாணி. 9 மணிக்கு தொடங்கிய முதல் காட்சி தற்போது முடிந்த நிலையில், விஜய் ரசிகர்கள் பிரியாணி சாப்பிட ஏற்பாடுகள் செயப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, அடுத்த காட்சிக்கு காத்திருந்த ரசிகர்கள் தயார் செய்யப்பட்டு வைத்திருந்த பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.
Leo FDFS: லியோவில் காதலுக்கு மரியாதை!! திரைக்கு முன்பு நடைபெற்ற திருமணம் நிச்சயம்!
லியோ
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். பெரிய எதிர்பார்ப்புக்கு வெளியாகியுள்ள இப்படம் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025