ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணையபோகும் ஸ்பைடர்…!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த படம் ஸ்பைடர். கடந்த 27-ந்தேதி திரைக்கு வந்த இந்த படம் இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும் திரையிட்ட அனைத்து இடங்களிலும் நல்ல ஓப்பனிங்கே கிடைத்து வருகிறதாம்.அந்த வகையில், ஸ்பைடர் படம் திரையிட்ட முதல் நாளில் ரூ. 51 கோடி ரூபாய் வசூலித்து பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. அதையடுத்து இரண்டாவது நாள் ரூ. 21 கோடி வசூலித்துள்ளதாம். ஆக, இரண்டு நாட்களில் ஸ்பைடர் படம் ரூ. 72 கோடி வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட் டுள்ளது. மேலும், இன்னும் சில தினங்களில் ஸ்பைடர் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்து விடும் என்றும் எதிர்பார்ப்பதாக அப் படத்தை தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.