10 ஓவர்…8 அணி…பிப்ரவரி 18 முதல் பிரம்மாண்டமாக தொடங்கும் சிசிஎல்.!

Published by
பால முருகன்

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2023: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (சிசிஎல்) எனப்படும் இந்த ஆண்டின் மிக அற்புதமான கிரிக்கெட் லீக்கைக் காண கிரிக்கெட் ரசிகர்களும் ஆர்வமாக இருக்கும் இந்த கிரிக்கெட் போட்டி வருகின்ற பிப்ரவரி 18 சனிக்கிழமையன்று தொடங்குகிறது.  10 ஓவர் கொண்ட இந்த சிசிஎல் கிரிக்கெட் போட்டியில்  இந்தியாவின் 8 மாநிலத்தைச் சேர்ந்த அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுக்கொள்கிறார்கள்.

CCL 2023
CCL 2023 [Image Source : Twitter]

இந்த ஆண்டு CCL ஆனது இந்தியாவின் 8 வெவ்வேறு பிராந்தியங்களில் இருந்து 8 அணிகளை உள்ளடக்கும். ஜெய்ப்பூர், ஹைதராபாத், ராய்ப்பூர், ஜோத்பூர், பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட நாட்டின் ஆறு முக்கிய நகரங்களில் இந்த சீசனில் 19 போட்டிகள் நடத்தப்படவுள்ளது.  மும்பை ஹீரோஸ், சென்னை ரைனோஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ், பெங்கால் டைகர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ் மற்றும் பஞ்சாப் டி ஷெர்ஸ் ஆகிய 8 அணிகள் லீக் சுற்றில் நேருக்கு நேர் மோதுகின்றது.

ஆர்யா தலைமையில் சென்னை அணியில் பரத், விக்ராந்த், ஜீவா, விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் கலந்த கொள்கிறார்கள். 3 ஆண்டுகளுக்கு பிறகு சிசிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்துடன் போட்டியை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். எனவே இந்த முறை போட்டியை பார்க்க ரசிகர்கள் கூட்டமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CCL 2023 [Image Source : Twitter]

பிப்ரவரி 18-ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டியை ZEE டிவி நெட்வொர்க்குகளில் பார்க்கலாம். அதைப்போலவே அனைத்து 19 CCL போட்டிகளில் Zee Anmol Cinema சேனலில் ஒளிபரப்பாகும். கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற சிசிஎல் போட்டியில்  என்பது மும்பை ஹீரோஸ் அணி  குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

15 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

16 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

19 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

19 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

20 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

2 days ago