10 ஓவர்…8 அணி…பிப்ரவரி 18 முதல் பிரம்மாண்டமாக தொடங்கும் சிசிஎல்.!
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2023: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (சிசிஎல்) எனப்படும் இந்த ஆண்டின் மிக அற்புதமான கிரிக்கெட் லீக்கைக் காண கிரிக்கெட் ரசிகர்களும் ஆர்வமாக இருக்கும் இந்த கிரிக்கெட் போட்டி வருகின்ற பிப்ரவரி 18 சனிக்கிழமையன்று தொடங்குகிறது. 10 ஓவர் கொண்ட இந்த சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் 8 மாநிலத்தைச் சேர்ந்த அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுக்கொள்கிறார்கள்.
இந்த ஆண்டு CCL ஆனது இந்தியாவின் 8 வெவ்வேறு பிராந்தியங்களில் இருந்து 8 அணிகளை உள்ளடக்கும். ஜெய்ப்பூர், ஹைதராபாத், ராய்ப்பூர், ஜோத்பூர், பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட நாட்டின் ஆறு முக்கிய நகரங்களில் இந்த சீசனில் 19 போட்டிகள் நடத்தப்படவுள்ளது. மும்பை ஹீரோஸ், சென்னை ரைனோஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ், பெங்கால் டைகர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ் மற்றும் பஞ்சாப் டி ஷெர்ஸ் ஆகிய 8 அணிகள் லீக் சுற்றில் நேருக்கு நேர் மோதுகின்றது.
ஆர்யா தலைமையில் சென்னை அணியில் பரத், விக்ராந்த், ஜீவா, விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் கலந்த கொள்கிறார்கள். 3 ஆண்டுகளுக்கு பிறகு சிசிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்துடன் போட்டியை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். எனவே இந்த முறை போட்டியை பார்க்க ரசிகர்கள் கூட்டமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 18-ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டியை ZEE டிவி நெட்வொர்க்குகளில் பார்க்கலாம். அதைப்போலவே அனைத்து 19 CCL போட்டிகளில் Zee Anmol Cinema சேனலில் ஒளிபரப்பாகும். கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற சிசிஎல் போட்டியில் என்பது மும்பை ஹீரோஸ் அணி குறிப்பிடத்தக்கது.